“20 மணி நேரம்” இருட்டறையில் சீரழிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்! வசமாய் சிக்கிய “பவன் கல்யாண்”
அமராவதி : ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனி அறையில் அடைத்து வைத்து சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக மூன்றுபேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது சிறுமியை 80க்கும் மேற்பட்டோர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 74 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மீண்டும் ஒரு மருத்துவமனையிலேயே மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின், 23 வயதான பெண் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்ற வேளையில் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஊழியரான தாரா ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஆசை வார்த்தை கூறி தான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் பலாத்காரம்
ஆள் நடமாட்டம் இன்றி மருத்துவமனையில் ஒரு ஓரமாக இருந்த தனி அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்ற ஸ்ரீகாந்த் அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரை அங்கேயே விட்டுவிட்டு தனது வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தான் எங்கிருக்கிறோம் என தெரியாமல் சுற்றித் திரிந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே மருத்துவமனையில் பணிபுரியும் சென்னா பாபு ராவ், ஜோரங்குலா பவன் கல்யாண் ஆகியோர் அவரை மீண்டும் மருத்துவமனையில் இருந்த அறைக்கு அழைத்துச்சென்று 20 மணி நேரத்திற்கு மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனிடையே தனது மகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் விஜயவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யாமலும், உரிய விசாரணை நடத்தாமல் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த மருத்துவமனையில் பெண் சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மீட்க வராததால் பெண்ணின் பெற்றோரே மருத்துவமனைக்குச் சென்று அந்த பெண்ணை மீட்டனர். அப்போதுதான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதே மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

அதிரடி கைது
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாரா ஸ்ரீகாந்த், சென்னா பாபு ராவ், ஜோரங்குலா பவன் கல்யாண் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற கொடுமையிலிருந்து தப்பி இருக்கலாம் எனவும் காவல்துறையினர் அலட்சிய போக்கே இந்த பிரச்சனைக்கு காரணம் என மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications