அவன்கிட்ட பேசி சமாளிக்க முடியல.. விசாரணை அதிகாரிகளை திணற வைத்த இந்தியாவின் பின்லேடன்!
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: அப்துல் சுபான் குரேஷி என்ற தீவிரவாதியை டெல்லி போலீஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தது. இவர் இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர்.
உலகத்தில் உள்ள நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவன் நேரடி தொடர்பில் இருந்தார்.
தற்போது விசாரணை அதிகாரிகள் இவனை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அவனிடம் பேசி எந்த விஷயத்தையும் வாங்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

அப்துல் சுபான் குரேஷி
அப்துல் சுபான் குரேஷி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் செயல்பட்டு வந்த முக்கியமான தீவிரவாதி. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மற்றும் சூரத்தில் 2008 ஜூலை மாதம் 26ம் தேதி தொடர்ச்சியாக இருபது இடங்களில் குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 56 பேர் மரணம் அடைந்தார்கள். பெங்களூரில் 2014ல், டெல்லியில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு என அனைத்திற்கும் இவர்தான் காரணம்.

பிடித்தனர்
2 நாள் முன்பு டெல்லி போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து இவரை கைது செய்து இருக்கிறது. தற்போது இவருக்கு 46 வயது நிரம்பி உள்ளது. சுபானுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

விசாரணை நடத்தினார்கள்
இவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அது குறித்து பேசி உள்ளனர். அதில் ''அவனிடம் பேச முடியவில்லை. அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி சினிமா வரை அனைத்தும் பேசுகிறான். ஆனால் முக்கிய தகவல் எல்லாவற்றையும் மறைக்கிறான்'' என்று கூறியுள்ளனர். அவன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்தவன்.

பிரச்சனை
மேலும் ''அவனுக்கு இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் பிடிக்கவில்லை. முக்கியமாக சிறுபான்மை பிரச்சனைகள் அனைத்தும் அவனுக்கு மனப்பாடமாக தெரிந்துள்ளது. எல்லாவற்றை குறித்தும் எங்களிடமே கேள்வி கேட்கிறான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications