குஜராத்தில் கொடி நாட்டுமா காங்கிரஸ்? ஆடு புலி ஆடும் ஆம் ஆத்மி.. கருத்து கணிப்பு சொல்வதென்ன?
காந்திநகர்: இன்னும் சில நாட்களில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் இந்த தேர்தலில் எந்த இடத்தில் இருக்கிறது என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இக்கேள்விக்கு 'ABP CVoter' நடத்திய கருத்துக்கணிப்பு பதிலளித்துள்ளது. அதாவது காங்கிரஸின் பெரும்பாலான வாக்குகளை 'ஆம் ஆத்மி' கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது காங்கிரசின் வாக்கு வங்கியில் சுமார் 20 சதவிகிதம் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

குஜராத்
'குஜராத்' மேற்கு மாநிலங்களில் மிகவும் கவனிக்கத்தக்க மாநிலம் இது. இந்துக்களின் சொர்க பூமி என்றுகூட இதனை சிலர் சொல்வதுண்டு. அதனால்தான் என்னவோ பாஜக இரண்டு துறவிகளை தேர்தலில் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜக இம்முறையும் குஜராத்தை கைப்பற்றும் நோக்குடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதெல்லாம் 27 ஆண்டுகளாகதான். அதற்கு முன்ன நிலைமைய என்ன? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதை விட குஜராத் 'காந்தியின்' சொந்த மாநிலம். எனவேதான் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் இது காங்கிரஸின் கோட்டையாக இருந்தது.

வாக்கு சதவிகிதம்
இப்போதும் ஒன்னும் குறைந்து போய்விடவில்லை. கடந்த 2017 தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு நம்பிக்கை அளிப்பதாகவேதான் இருக்கிறது. அதாவது, 41.4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக இதைவிட கொஞ்சம் அதிகம். அதாவது 49.1% அவ்வளவுதான். எனவே இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிடுவோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் கட்சியின் பிரசாரத்திலிருந்தே தோய்வு தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதாவது, பாஜவை போல காங்கிரஸ் விளம்பரங்களுக்கு அதிக தொகையை செலவு செய்யவில்லை.

விளம்பரத்திற்கு 'நோ'
மாறாக அடிமட்டங்களில் மக்களை நேரடியாக வீடு வீடாக சென்று சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரமாண்ட 'மீடியா' பிரசாரத்திற்கு நடுவில் வீடு வீடாக சென்று சந்திக்கும் பாணி கைகொடுக்குமா என்பது சந்தேகமே என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சாவ்தா, "கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் பாஜக தாராளமாக செலவு செய்கிறது. ஏனெனில் அவ்வளவு கொள்ளையடித்திருக்கிறது. எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது. எனவே விளம்பரங்களில் பணத்தை வீணடிக்காமல் மக்களுடன் நேரடியாக செல்ல முடிவெடுத்தோம்.

பழைய பாணி
இதன் மூலம் நாங்கள் வீடு வீடாக சென்று பிரசாரத்தை மேற்கொள்கிறோம். இது கட்சியின் பழைய பாணி. இத்துடன் இரண்டு அம்சங்களை கையில் எடுத்துள்ளோம். ஒன்று, கட்சி இதுவரை செய்த சாதனைகள். மற்றொன்று, கட்சியின் 8 அம்ச செயல் திட்டம். இது இரண்டும்தான் எங்களுக்கு பலம்" என்று கூறியுள்ளார். மேலும், "கடந்தை 27 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த சாதனைகளை மக்களிடமும் இன்றைய இளைஞர்களிடமும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். எனவேதான் வீடு வீடாக பிரசாரத்தை மேற்கொள்கிறோம்" என்று கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹேமங் ராவல் விளக்கமளித்துள்ளார்.

வாக்குறுதி
கட்சி வழங்கியுள்ள வாக்குறுதியில், காஸ் சிலிண்டர் விலை குறைப்பு, 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, 3,000 ஆங்கில வழிப் பள்ளிகள், பால் பொருட்களுக்கு மானியம், அரசு வேலை, வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு, வேலையில்லா காலத்தில் இளைஞர்களுக்கு ரூ.30,000 வரை நிவாரணம் உள்ளிட்ட வை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் நிச்சயம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கட்சியினர் கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் அடங்கிய இதுவரை 1.5 கோடி துண்டு பிரசுரங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

பின்னடைவு
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜடோ யாத்திரை' குஜராத்தில் நுழையாதது, நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சசி தரூரின் பெயர் விடுபட்டிருப்பது, தாமததாக துவங்கும் பிரசாரம், பிரதமர் மோடி தொடர்ந்து அறிவிக்கும் திட்டங்கள் ஆகியவை காங்கிரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல ஏற்கெனவே பஞ்சாபில் காங்கிரஸை 'காலி' செய்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் காங்கிரசுக்கு சவலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கருத்து கணிப்பு
'ABP CVoter' நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் இந்த முறை தனது வாக்கு வங்கியில் கணிசமான அளவை ஆம் ஆத்மியிடம் இழக்கும் என்று கூறியுள்ளது. அதற்கேற்றார் போலவே ஆம் ஆத்மியினரும் தொடக்கம் முதல் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்றே கூறி வருகிறது. 'ABP CVoter' கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸின் 20.2% வாக்குகளை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கூறியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் 41.1 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 29.1 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படியாயினும் தேர்தல் முடிவுகளே அனைத்தையும் தீர்மானிக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications