நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, மோடி, அமித்ஷாவிற்கு எதிரானவன்.... கர்ஜிக்கும் பிரகாஷ்ராஜ்!
தான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல, பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஹைதராபாத் : நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஆனந்த் ஹெக்டேவிற்கு எதிரானவன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறும் அவர்கள் இந்துக்களே இல்லை என்றும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான். எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது.
30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா?

கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன்
நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். என்றாலும் எனக்கு பெங்களூரில் ஒரு இடம் தேவைப்பட்டது.

இந்து விரோதி என குற்றம்சாட்டுகிறார்கள்
ஆனால் அவர்களைப் பாருங்கள், அவர்களுக்கு என்னுடைய செயல் எவ்வளவு ஆற்றொண்ணாமையை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள். நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று என் மீது அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்துக்களுக்கு எதிரியல்ல மோடிக்கு எதிரி
நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல, நான் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஹெக்டேவிற்கு எதிரானவன் என்றார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் யார் இந்து என நீங்கள் எவ்வாறு கூற முடியும் என்று பிரகாஷ் ராஜை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.

ஆதரவு இல்லை
அதற்கு நான் இந்துக்கு எதிரானவன் என்று எப்படி அவர்கள் கூற முடியும். பிறரை கொலை செய்பவர்களுக்கு இந்துக்கள் உள்பட யாரும் ஆதரவு தருவதில்லை என்றும் பிரகாஷ் ராஜ் தெரவித்தார்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications