For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவில் சேர முயன்று ஆப்படிக்கப்பட்ட 'பிங்க் ஜட்டி' புகழ் பிரமோத் முத்தலிக்.. !

|

பெங்களூர்: தீவிர மத வெறியராக அறியப்பட்ட பிரமோத் முத்தலிக், பாஜகவில் சேர்ந்த வேகத்தில் அதை சஸ்பெண்ட் செய்து விட்டது பாஜக. இதற்குக் காரணம், முத்தலிக்கை சேர்த்ததற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பாஜக அனுதாபிகள் எழுப்பிய கடுமையான கண்டனக் குரல்களே.

முத்தலிக்கை சேர்த்தால் பாஜகவின் பெயர் நாறி விடும். இப்படிப்பட்டவரைச் சேர்க்க எப்படி பாஜக முடிவு செய்தது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் போட்டு வறுத்தெடுத்து விட்டனர்.

இதையடுத்தே முத்தலிக்கை கட்சியில் சேர்த்ததை நிறுத்தி வைத்துள்ளது பாஜக.

அடிப்படையில் ஆர்எஸ்எஸ்

அடிப்படையில் ஆர்எஸ்எஸ்

பிரமோத் முத்தலிங் அடிப்படையில் பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்.

ஆனால் பண்ணாத ரவுஸ் இல்லை

ஆனால் பண்ணாத ரவுஸ் இல்லை

ஆனால் இவர் பண்ணாத ரவுசு இல்லை. இவரைத் தாங்க முடியாமல், பொறுக்க முடியாமல் பஜ்ரங் தளம் இவரை அமைப்பை விட்டு நீக்கி விட்டது. இதையடுத்து கர்நாடக சிவசேனாவை ஆரம்பித்தார் முத்தலிக்.

பெல்காம் பிரச்சினையால் சிவசேனாவுக்கு குட்பை

பெல்காம் பிரச்சினையால் சிவசேனாவுக்கு குட்பை

இந்த நிலையில், பெல்காம் எல்லைப் பிரச்சினை தொடர்பாக மகாராஷ்டிரா மீது கடும் கோபமடைந்து சிவசேனா அமைப்பைக் கலைத்து விட்டு ஸ்ரீராம் சேனா என்ற புதிய இந்துத்வா அமைப்பை உருவாக்கினார் முத்தலிக்.

அடாவடி ஸ்டைல்

அடாவடி ஸ்டைல்

முத்தலிக் மற்றும் அவரது அமைப்பினரின் செயல், அடாவடித்தனமானது. அதிரடியாக பப்புகளுக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்குவது, கலாச்சார சீர்கேடு என்று கூறி காதலர் தினக் கொண்டாட்டங்களை சீர்குலைப்பது, இலைஞர்கள், இளம் பெண்கள் பொது இடங்களில் ஜோடியாக சுற்றினால் தாக்குவது என்று அதிரடியாக செயல்பட்டு வந்தது ராம் சேனா.

மங்களூப் பப் தாக்குதல்

மங்களூப் பப் தாக்குதல்

இந்த அமைப்பினர் நடத்திய மிகவும் வெறித்தனமா்ன தாக்குதல் மங்களூரில் உள்ள ஒர பப்புக்குள் புகுந்து 40க்கும் மேற்பட்டோர் நடத்திய தாக்குதல்தான். இளம் பெண்கள், ஆண்களை சரமாரியாக தாக்கி வெறித்தனமாக நடந்து கொண்டனர். பெண்களையும் சரமா்ரியாக தாக்கிய இவர்களது செயலால் நாடே அதிர்ந்தது.

கடுப்பாகி தடை செய்த எதியூரப்பா அரசு

கடுப்பாகி தடை செய்த எதியூரப்பா அரசு

அப்போது கர்நாடகத்தில் எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. முத்தலிக் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மங்களூருக்குள் அவர் வருவதற்குத் தடை விதித்தது எதியூரபபா அரசு.

பிங்க் ஜட்டி பிரசாரம்

பிங்க் ஜட்டி பிரசாரம்

இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முத்தலிக்குக்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று பிங்க் ஜட்டி எதிர்ப்புப் பிரசாரத்தை முடுக்கி விட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், காதலர் தினத்திற்கு எதிராகவும், பப்புகளுக்குப் பெண்கள் போவதை எதிர்த்தும் தாக்குதல் நடத்தி வந்த முத்தலிக்கைக் கண்டித்து அவருக்கு இளம் சிவப்பு நிற பெண்கள் உள்ளாடையை அனுப்பி வைக்கும் போராட்டமே அது.

டெஹல்கா பெண் ஊழியரின் போராட்டம்

டெஹல்கா பெண் ஊழியரின் போராட்டம்

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர் டெஹல்கா பத்திரிக்கையில் பணியாற்றி வந்த நிஷா சூசன் என்பவர்தான்.

சென்ற இடமெல்லாம் சிறப்பு

சென்ற இடமெல்லாம் சிறப்பு

இப்படி தனது அறுவெறுப்பான செயல்களால் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் கெட்ட பெயரைச் சம்பாதித்துள்ள அமைப்புதான் முத்தலிக்கின் ஸ்ரீராம் சேனா அமைப்பு. இந்து மத்தின் கெளரவத்தைக் காப்பதாக கூறி இந்துக்களைத் தலை குணிய வைத்தவர்தான் முத்தலிக்.

உள்ளே புகுந்து தடுத்த டெல்லி

உள்ளே புகுந்து தடுத்த டெல்லி

முத்தலிக்கை பாஜகவில் சேர்த்த செய்தி பரவியதும் எதிர்ப்பலை கடுமையாக கிளம்பியது. இதையடுத்து தலையிட்ட டெல்லி தலைமை இந்த சேர்ப்பை நிறுத்தி வைத்து விட்டது.

சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றுதான்

சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றுதான்

அதேசமயம், இவர் பாஜகவில் சேர்ந்துதான் இந்து தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதில்லை. காரணம், ஸ்ரீராம் சேனாவில் இருப்பவர்களைப் போலத்தான் பலரும் பாஜகவிலும் இருக்கிறார்கள்.

English summary
In perhaps one of the fastest political recalls of our times, BJP withdrew the membership of controversial chief of Ram Sene Pramod Muthalik. Following strong outrage against the party's decision to bring the right wing leader into their fold, from many of their own followers, may have prompted immediate action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X