சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு அறிமுகமான ஜிஎஸ்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜிஎஸ்டி வரி முறையை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தனர்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் பொத்தானை அழுத்தி ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் ஜிஎஸ்டி குறித்த வீடியோவுடன் அறிமுக விழா நிறைவடைந்தது. இதையடுத்து நாடு முழுவதும் ஒரே சீரான வரி அமலுக்கு வந்தது.

ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ், இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆதரவு கட்சிகளுடன் இன்று மத்திய அரசு அமல்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Pranab Mukherjee, PM Narendra Modi launch Goods and Services Tax in parliment
Please Wait while comments are loading...