For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.. பிரதமர் மோடி தகவல்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கனடா பிரதமரை சந்திக்க ஆவலோடு காத்திருக்கும் பிரதமர் மோடி- வீடியோ

    டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    உலகின் வசீகர தலைவரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார்.

    அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.

    மோடி இன்று சந்திப்பு

    மோடி இன்று சந்திப்பு

    தொடர்ந்து நேற்று மீண்டும் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். ‘

    ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்

    ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை அதாவது இன்று சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    குழந்தைகளை சந்திக்க

    குறிப்பாக அவரது குழந்தைகளான சேவியர், எல்லா கிரேஸ், ஹட்ரியன் ஆகியோரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். கடந்த 2015ஆம் ஆண்டு நான் கனடா சென்றபோது எடுத்த படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

    அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்

    இந்தியா- கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ட்ரூடோவுடன் பேச உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நமது இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் அவமதிப்பு

    பிரதமர் அவமதிப்பு

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மற்ற நாட்டு தலைவர்களை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்கும் பிரதமர் மோடி கனடா கனடா பிரதமரை கண்டுகொள்ளாமல் அவமதித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

    முக்கியத்துவம் வாய்ந்தது

    முக்கியத்துவம் வாய்ந்தது

    இந்நிலையில் இன்று நிகழ உள்ள பிரதமர் மோடி- ட்ரூடோ இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English summary
    Prime Minister Modi tweets about his meet with Canada PM Justin trudeau. He said that I look forward to meeting PM @JustinTrudeau tomorrow and holding talks on further strengthening India-Canada relations in all spheres. I appreciate his deep commitment to ties between our two countries Modi said further.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X