பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்.. 3 கி.மீ. ரோடு ஷோ..ரூ.5,477 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக இன்று மாலை அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி நடோராவில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ளார். பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் அவர், இந்த 2 நாள் சுற்றுப் பயணத்தில் ரூ. 5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

அங்கு நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோவில் 1 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக குஜராத் மாநில சுகாதார அமைச்சரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான ருஷ்கிலேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 133.42 கோடி மதிப்பில் 1,449 வீடுகள் மற்றும் 130 கடைகளை திறந்து வைக்கவுள்ளார். இந்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தில் ரூ. 5,477 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications