இப்படி செய்தால் வீட்டுக்கு கிளம்பி விடுங்கள்.. மவுன ஊர்வலத்தில் சீறிய பிரியங்கா காந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி ஆசிஃபா கொலை-போராட்டங்கள் வலுத்தது

  டெல்லி: இங்கே வந்து நின்று கொண்டு, தள்ளிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்பவர்கள் வீட்டை பார்த்து போய்விடலாம் என கோபத்தில் சீறினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி.

  உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் பெண் ஒருவரை பாஜக எம்எல்ஏ பலாத்காரம் செய்த சம்பவம் மற்றும் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றை கண்டித்து நேற்று நள்ளிரவில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்றார்.

  Priyanka Gandhi in angry mood at Rahul Gandhis midnight march

  இந்த ஊர்வலத்தில், ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி, அவர் கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  ஊர்வலத்தின்போது அதில் பங்கேற்றவர்கள் பேசியபடி வந்தனர். கூட்டத்தால் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதை பார்த்ததும், பிரியங்கா காந்தி கடும் கோபமடைந்தார்.

  "இடித்துக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்போர்கள் வீடுகளுக்கு போய்விடுங்கள். இங்கே நாம் எந்த காரணத்திற்காக வந்துள்ளோம் தெரியுமா", என கூட்டத்தினரை பார்த்து கோபத்தோடு கேள்வி எழுப்பினார் பிரியங்கா காந்தி. இதன்பிறகு, கூட்டத்தில் அமைதி நிலவியது. ஊர்வலம் முழுக்கவுமே, பிரியங்கா காந்தி மிகுந்த ஆவேசத்தோடு காணப்பட்டதை கவனிக்க முடிந்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Those who are here to push around people must go home. Now please maintain calm and walk silently, an angry Priyanka Vadra told the crowd.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற