புரோ கபடி போட்டிகள் 2017: வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி வரை பரிசுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : புரோ கபடி போட்டிகளில் பங்கேற்று வெல்லும் அணியினருக்கு ரூ. 8 கோடி பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, புரோ கபடி லீக் கமிஷனர் அனுபம் கோஸ்வாமி கூறுகையில், "

5வது புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. விளையாட அணிகள் தயார் நிலையில் உள்ளன. விளம்பரதாரர்கள் டீல் இப்போதே, போட்டிகள் தொடங்குவதற்கு முன்னே ஆரம்பித்து முடிந்துள்ளது.

 Pro Kabaddi League 2017: Huge hike in prize money; winners to get Rs 8 crores

8 கோடி ரூபாய் அளவுக்குப் பரிசுகள் கொடுத்து வீரர்களை உற்சாகப்படுத்த, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ஐந்தாவது லீக் போட்டிகள் ஆகும். இதில் லீக் சாம்பியன் அணி தேர்வு செய்யப்படவுள்ளது.

முதல் போட்டி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கும், தமிழ் தலைவாஸ் அணிக்கும் இடையே நடக்கவுள்ளது" என்று தெரிவித்தார்.

புரோ கபடி லீக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்க உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 144 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் சுற்றுகளில் வெளியேறும் அணிகளுக்கு மறுபடி விளையாட வயில்ட் கார்ட் வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

'ஏ' பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங், பாந்தர்ஸ், புனே ரிபல்தான் யு மும்பா, அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெய்ன்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், பாட்னா பிரேட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ், உ.பி.யோதாஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டிக்கு மூன்று குவாலிபையர் ஆட்டமும், இரண்டு எலிமினேட்டர் ஆட்டமும் நடைபெறும்.

Tamil Nadu Premier League 2017 Fixtures, Teams, Squad, Players List-Oneindia Tamil

புரோ கபடி 'லீக்' போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் 28-ந்தேதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை லீக் போட்டிகளும் சென்னையில் நடைபெற உள்ளது. இது தவிர 'எலிமினேட்டர் 2' ஆட்டமும் சென்னையில் அக்டோபர் 26-ந்தேதி நடக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 5th edition of the Vivo Pro Kabaddi League (PKL) will have prize money of Rs 8 crores ($1,244,800) -- a significant and unprecedented jump of Rs 6 crores. The title winners will take home Rs 3 crores ($466,800), it was announced on Saturday (July 15).
Please Wait while comments are loading...