காதலர் தின சர்ச்சை... கேரளாவில் சிவசேனாவுக்கு எதிராக 'முத்தம் தரும் போராட்டம்'
சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் கொச்சியில் முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது.
கொச்சி: சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கிய சிவசேனா தொண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் கொச்சியில் முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது.
கேரள மாநிலம் கொச்சியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மரைண்டிரைவ் பகுதி. இங்கு சர்வேச மகளிர் தினத்தில் ஏராளமான ஆண்களும் , பெண்களும் கூடி இருந்தனர்.
அப்போது அங்கு வந்து சிவசேனா தொண்டர்கள், அவர்களை இங்கே வரக்கூடாது என்று தகாத வார்த்தையில் திட்டி, பிரம்பால் அடித்து விரட்டினர். இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று முத்தப் போராட்டம் நடத்த " கிஸ் ஆப் லவ்" என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

முத்தம் தரும் போராட்டம்
இந்த அழைப்பை ஏற்று கொச்சியில் நேற்று முத்தம் தரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு, முத்தம் கொடுத்து தங்கள் எதிர்பை தெரிவித்தனர்.

சட்டசபையில்...
இந்த போராட்டம் திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. சிவசேனாவின் தாக்குதல் சம்பவம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.

முதல்வர்
சிவசேனாவின் தாக்குதலுக்கு சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் பினராயி விஜயன், சிவசேனாவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கிஸ் ஆப் லவ் அமைப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில்"கிஸ் ஆப் லவ்" அமைப்பினர் பொது இடங்களில் முத்தம் தரும் போராட்டம் நடத்தினர். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் இந்த அமைப்பு முத்தம் தரும் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்படத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications