For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Provide printed receipt of cast vote, Supreme Court rules
டெல்லி: தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சுவாமி இது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது.

அப்போது தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. அதனால் வாக்களித்த 15 வினாடிகளுக்குள் அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு கிடைக்கச் செய்ய வேண்டும்.

பின்னர் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் உள்ள பாதுகாப்பான பெட்டியில் அந்த ஒப்புகைச் சீட்டை போட்டுவிட வேண்டும். இந்த ஒப்புகை சீட்டுக்காக தேர்தல் ஆணையத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அத்துடன் எந்தத் தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

English summary
In a historic ruling, the Supreme Court has directed the Election Commission to provide a printed receipt of the vote to the voter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X