வீட்டை காணோம்! ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீடுகள் மாயம்! ம.பியில் பாஜக அரசு மீது சரமாரி புகார்
போபால்: கடந்த மாதம் 22ம் தேதி பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கு 4.51 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டன. பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இந்த வீடுகளை வழங்கினர்.
ஆனால் வீடுகள் முறையாக கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தனியார் செய்தி ஊடகம் ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் இறந்தவர்கள் பெயரில் வீடுகள் ஒதுக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குஜராத்தில் பாஜக தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் அக்கட்சி தலைமையிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகள்
மத்தியப் பிரதேசத்தில் 'தந்தேராஸ்' பண்டிகை கடந்த 22ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் 'அவாஸ் யோஜனா திட்டத்தின்' ஏழை எளிய மக்களுக்கு 4.51 லட்சம் வீடுகளை பிரதமர் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சி பரவலாக பேசப்பட்டது. பாஜக அனைத்து மக்களுக்குமான கட்சி என்றும், பாஜகவால் மட்டுமே மக்களை துன்பத்திலிருந்து விடுவிக்க முடியும் என்றும் கட்சியின் தலைவர்கள் கூறியிருந்தனர்.

75 வீடுகள் மாயம்
ஆனால் தற்போது வெளி வந்துள்ள ஆய்வின் முடிவுகள் பாஜக தலைவர்களின் இந்த வார்த்தையின் உண்மை தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதாவது பிரதமர் அர்ப்பணித்த வீடுகளில் 75 வீடுகள் காணாமல் போயுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வடிவேலு பட பாணியில் 'வீட்ட காணோம்' என சம்பந்தப்பட்டவர்கள் புலம்பத் தொடங்கினர். இதனையடுத்து 'என்டிடிவி' செய்தி ஊடகம் சம்பந்தப்பட்ட மக்களிடத்தில் பேட்டி எடுத்து ஆய்வும் மேற்கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் சுமார் 698 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்கிருந்துதான் புகார்கள் வந்திருந்தன.

இறந்தவர்கள் பெயரில் வீடு
ரஹிக்வாரா கிராம பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல வீடுகள் இறந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இக்கிராமத்தை சேர்ந்த லால்மன் சவுத்ரி எனும் நபர் கடந்த 2016ல் உயிரிழந்துவிட்டார். ஆனால் அவரின் பெயரில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து லால்மனின் மகன் சிவகுமார் சவுத்ரி கூறுகையில், "எனது தந்தை 2016ல் உயிரிழந்துவிட்டார். தாய்க்கு காது கேட்காது. நானும் மாற்றுத் திறனாளி. என்னுடைய மனைவிக்கு சரியாக பேச வராது. எனது தந்தையின் பெயரில் வீடு கட்டப்பட்டது. ஆனால் எங்களுக்கு எந்த வீடும் வழங்கப்படவில்லை. நாங்கள் இன்னமும் குடிசையில்தான் வசித்து வருகிறோம்.

கெஞ்சிய பெண்மணி
அதேபோல வங்கிக் கணக்கில் பணம் வருவதாக கூறினார்கள். ஆனால் எந்த பணமும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. இங்கு பலரும் இப்படிதான் ஏமாந்திருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். அதே பகுதியை சேர்ந்த சுண்டி பாய் எனும் பெண்மணிக்கும் இதே போல வீடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பேட்டியின்போது கைகளை கூப்பி "அவர்கள் எனக்கென எதையும் கொடுக்கவில்லை. கொடுத்தது எல்லாமும் பறிக்கப்பட்டுள்ளது. எனக்கு யார் மீதும் நம்பிக்கையில்லை. எனக்கு எனது வீடு கிடைக்க உதவி செய்யுங்கள்" என்று அப்பெண்மணி கெஞ்சியுள்ளார்.

நடவடிக்கை
மற்றொரு பெண்மணியான முன்னிபாய் குப்தாவும் இதேபோல மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். தனது கணவனை இழந்துவிட்ட அவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அரசு திட்டங்களின் எல்லா புகைப்படங்களிலும் இவர் இருக்கிறார். ஆனால் இவருக்கு என ஒரு வீடு இல்லை. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில அமைச்சருக்கு செய்தியாளர்கள் தொடர்புகொண்டபோது முதலில் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர் ஆட்சியர் மட்டும், "முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே (டபுள் என்ஜின்) அரசு அமைந்தால் அதீத வளர்ச்சி இருக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில், இந்த ஆய்வை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications