ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க மோடிக்கு ஐடியா கொடுத்த அந்த நபர் யார் தெரியுமா?
டெல்லி: ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்ததன் பின்னணியில் ஒரு நபர் உள்ளார்.
சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

இப்படி, பிரதமரையே வியப்பில் ஆழ்த்தி ஐடியா கொடுத்த அந்த நபர் பெயர் அனில் போகில். புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர்.
அனில் போகில் பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அந்த ஆலோசனைகளில் முக்கியமானவை இவைதான்:
*இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள்.
*ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.
*அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும்.
*வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும். இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார்.
இந்தியாவில் தினமும் சராசரியாக 2.7 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் பரிவர்த்தனையாகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.800 லட்சம் கோடி. இதில் 20 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் வழியாக நடைபெறுகிறது. எனவே கருப்பு பணத்தை கண்காணிக்க முடிவதில்லை.
நாட்டின் 78 சதவீத மக்கள் தினசரி சராசரியாக 20 ரூபாய் செலவிடுவதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. எனவே பெரிய முகமதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அவர்களுக்கு தேவையில்லை என அரசு கருதுகிறது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications