மோசடி மன்னன் நீரவ் மோடி குறித்து 2011-லேயே செபியிடம் புகார் அளித்தோம்.. பிஎன்பி வங்கி தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

  மும்பை: வைர வியாபாரி நீரவ் மோடி ரூ 11, 400 கோடி மோசடி செய்தது குறித்து தெரியவந்ததும் சிபிஐயிடம் புகார் அளித்துவிட்டேன் என்று பஞ்சாப் நேஷனல் வங்கித் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்தார்.

  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக வங்கி நிர்வாகமே பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அறிக்கையில் அனுப்பியுள்ளது. இந்த மோசடி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  Punjab National Bank's chief Sunil Mehta explains the scandal

  இந்த மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்நிலையில் நீரவ் மோடியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா கூறுகையில், நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி குறித்து எனக்கு தெரியவந்ததுமே சிபிஐயிடம் புகார் அளித்துவிட்டேன். ஆக்ஸிஸ் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளிலும் நீரவ் மோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

  2011-ஆம் ஆண்டிலேயே நீரவ் மோடி மோசடி குறித்து செபி அமைப்பிடம புகார் அளித்தோம். ஊழலுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Punjab National Bank's chief Sunil Mehta explains the scam that Nirav Modi also gets debts in two other banks.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற