ராடியா வழக்கு: மத்திய அரசு, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்! நீதிபதி சிங்வி விலகல்!!
டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவான டேப்புகள் குறித்த வழக்கு விசாரணையில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சிங்வி தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாடா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டேப்புகளை ஆராயவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களும் நீரா ராடியாவின் டேப் உரையாடலில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜி.எஸ். சிங்வி, வி. கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி சிங்வி இன்று அறிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications