விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பெயரை அறிவிக்கிறார் ராகுல்!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளதால் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பெயரை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்து வந்தார். சட்டசபைத் தேர்தலை அவரது தலைமையில் திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி சந்தித்தது. மிகப் பெரிய அளவில் திமுக, காங்கிரஸுக்கு இடங்களைக் கொடுத்தாலும் கூட வெறும் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஜெயித்தது.

இதனால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. மேலும் இளங்கோவன் மீதும் ஏகப்பட்ட புகார்கள் டெல்லிக்குப் பறந்தன. இந்த நிலையில் தனது தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து விட்டார். இதனால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு போயிருந்ததால் அடுத்த தலைவர் என்பதில் தாமதம் நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது ராகுல் திரும்பி விட்டார். இதையடுத்து விரைவில் புதிய தலைவருக்கான ஒப்புதலை அவர் தருவார் என்று தெரிகிறது.
தற்போதைக்கு அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் உள்ளதாக கூறப்படுகிறது. எச். வசந்தகுமாரும் முயற்சிக்கிறார். முன்னாள் தலைவர்களான தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி ஆகியோரும் முயற்சித்து வருகின்றனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications