For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடிஜி கிங்குதான்!: ஆனால் எதில் தெரியுமா?: ராகுலின் கிண்டலான விளக்கம் #PeTrolled

பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களை தருவதில் ராஜா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களை தருவதில் கிங் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்ததோடு ஒரு வீடியோவையும் ட்ரோல் செய்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி வந்த காலகட்டத்தில் 2016-ஆம் ஆண்டு வரை பெட்ரோல், டீசல் பொருட்களுக்கான உற்பத்தி வரி 9 முறை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை, 13 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76.72 ரூபாயாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 68.38 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல்

4 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது குறித்து மோடி பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

சல்மான் கான்

இதையடுத்து நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி அதே வீடியோவை ட்ரோல் செய்து பதிலளித்துள்ளார். மோடியின் பேச்சை கேட்டு சல்மான் கான் விழுந்து விழுந்து சிரிப்பது போன்ற வீடியோவையும் அவர் மிக்ஸ் செய்துள்ளார்.

ராகுல் காந்தி பதிவு

ராகுல் காந்தி பதிவு

எரிப்பொருள்களின் விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோவில் மோடி பேசுவது இந்தியாவை பற்றியல்ல வேறு நாட்டை பற்றிதான் என்று ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கருத்து

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளதற்கு காரணம் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான வரிகளால்தான் என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

English summary
Congress President Rahl Gandhi tweets that The poor & the middle class bear the brunt of rising fuel prices. In this video, our PM is quite obviously talking about some other country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X