For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமது அரசியலமைப்பு கேலிக்கூத்தாகிவிட்டது.. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு ராகுல் கண்டனம்!

நமது அரசியலமைப்பு கேலிக்கூத்தாகிவிட்டது என எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது குறித்து ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக-ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டது-குமாரசாமி, ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: நமது அரசியலமைப்பு கேலிக்கூத்தாகிவிட்டது என எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது குறித்து ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபையின் 222 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியானது.

    இதில் பாஜக-104 இடங்களிலும், காங்கிரஸ்-78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களிலும் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் வேண்டும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்வி எழுந்தது.

    மஜத - காங்கிரஸ் கூட்டணி

    மஜத - காங்கிரஸ் கூட்டணி

    இதனையடுத்து பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் நிபந்தனையற்ற கூட்டணியில் சேர்ந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி முதல்வர் பதவி வகிக்கவும் ஒப்புக்கொண்டது.

    பதவியேற்புக்கு எதிர்ப்பு

    பதவியேற்புக்கு எதிர்ப்பு

    இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வராக பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா இன்று பதவியேற்றார். இதற்கு காங்கிரஸ், மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சட்டத்திற்கு எதிரானது

    சட்டத்திற்கு எதிரானது

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி எடியூரப்பா பதவியேற்றது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

    கேலிக்கூத்தாகியுள்ளது

    ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருப்பது நமது அரசியமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பாஜகவினர் கொண்டாடுகின்றனர். ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும். இவ்வாறு ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.

    English summary
    Rahul gandhi condemns for Yeddyurappa taken oath as Karnataka CM. He said, the BJP’s irrational insistence that it will form a Govt. in Karnataka, even though it clearly doesn’t have the numbers, is to make a mockery of our Constitution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X