"சதாம் உசேன்.." ராகுலை பாருங்கள்.. உங்களுக்கே புரியும்.! புது குண்டை போட்ட அசாம் பாஜக முதல்வர்
கவுஹாத்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் இருக்கும் நிலையில், அவரை பற்றி அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்க பாத யாத்திரை சென்று காங்கிரஸ் தொண்டர்களையும் பொதுமக்களையும் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். இப்போது அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ளார்.
மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைகிறது. இந்த பாத யாத்திரைக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

அசாம் முதல்வர்
இதற்கிடையே அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "காங்கிரஸில் நாங்கள் ஒரு குடும்பத்தை வணங்கி வந்தோம். பாஜகவில் நாங்கள் நாட்டை வணங்குகிறோம். 22 ஆண்டுகள் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன். இருந்துள்ளேன் எனச் சொல்வதை விட 22 ஆண்டுகள் காங்கிரஸில் எனது காலத்தை வேஸ்ட் செய்துள்ளேன் எனச் சொல்லலாம்.

லவ் ஜிகாத்
டெல்லியில் இந்து பெண் சாரதாவை அவரது இஸ்லாமியக் காதலன் அப்தாப் கொலை செய்துள்ளார். இது லவ் ஜிஹாத் தான்" என்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி இதை லவ் ஜிகாத் எனச் சொல்ல முடியும்.. அனைத்து சமூகங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதே என்று கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல்,"லவ் ஜிஹாத்' என்றால் என்ன என்பதை சட்டப்பூர்வமாக வரையறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் மாநிலத்திலும் (அசாம்) கூட இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளது.

குஜராத் கலவரம்
இந்துக்கள் பொதுவாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள். நீங்கள் 2002 குஜராத் கலவரம் பற்றிக் கேட்கிறீர்கள். நான் பொதுவாகக் கலவரங்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே சொல்கிறேன். இந்துக்களுக்கு ஜிகாத் மீது நம்பிக்கையில்லை. இந்து ஒரு சமூகமாக, எப்போதும் அமைதியைத் தான் விரும்புவார்கள். நான் காங்கிரஸில் இருந்தாலும் இதையே தான் சொல்லி இருப்பேன். இந்துக்கள் அமைதியை விரும்புவார்கள் என நான் சொல்வதைக் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்க முடியுமா? நான் உண்மையைத் தான் சொல்கிறேன்" என்றார்.

சதாம் உசேன்
தொடர்ந்து ராகுல் காந்தி குறித்துப் பேசிய அவர், "ராகுல் காந்தி இப்போது பார்க்க சதாம் உசைன் போலத் தான் உள்ளார். அவரது லுக் அப்படி இருக்கிறது என்றே நான் சொல்கிறேன். ராகுல் அழகான தலைவர். அவர் ஒரு கவர்ச்சியான நபர். ஆனால், இப்போது நீங்கள் (சதாம் உசேன் மற்றும் ராகுல்) புகைப்படங்களை ஒப்பிட்டுப் பாருங்கள், உங்களுக்கே நான் சொல்வது புரியும். நான் அட்வைஸாக மட்டும் இதைச் சொல்கிறேன். ராகுல் காந்தி ஷேவ் செய்தால் பார்க்க அப்படியே அவரது தாத்தா நேரு போலவே இருப்பார்" என்றார்.

குஜராத் தேர்தல்
குஜராத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், "இந்த முறையும் குஜராத் தேர்தலில் பாஜக தான் வெல்லும். அங்கு பாஜக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. அங்குக் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தொடர்ச்சியாக வன்முறைகள் நடந்து வந்தன. இதனால் அங்கு அமைதி என்பதே இல்லாமல் இருந்தது. இதனால் குஜராத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத்தில் அமைதியான சூழல் நிலவ தொடங்கியது. இதன் காரணமாகவே குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டது.

வன்முறை
கடந்த 2002 குஜராத்தில் கலவரம் ஏற்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு குஜராத்தில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. அசாமிலும் கூட சிலர் தொடர்ச்சியாக வன்முறை ஏற்படுத்த முயன்றனர். இருப்பினும், இப்போது அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்" என்றும் அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்..
-
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications