Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திரா, ராஜீவ் கால 'ரத்த சம்பவங்கள்'-சீக்கியர் பொற்கோவிலில் பாத்திரம் கழுவி ராகுல் 'பிராயசித்தம்' ?

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் பாத்திரங்களை கழுவி ஆன்மீக சேவையாற்றினார்.

பஞ்சாப் பொற்கோவில்.. ராகுல் காந்தி குடும்பத்தில் பெருந்துயரங்களுடன் தொடர்புடையது. ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி படுகொலையின் பின்னணியில் பஞ்சாப் பொற்கோவில் இருக்கிறது.. இந்திரா காந்தி படுகொலையின் போது தந்தை ராஜீவ் பிரதமராக இருந்த நிலையில் நிகழ்ந்த பல்லாயிரம் சீக்கியர் படுகொலை இன்றளவும் துடைக்க முடியாத வரலாற்று கறையாகவே இருக்கிறது.

 Rahul Gandhi MP offeres Sewa at Golden Punjab Temple

இந்திராவின் பொற்கோவில் நடவடிக்கை: 1980களில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி - காலிஸ்தான் தனிநாடு அமைக்க வேண்டும் என்பதற்காக பிந்தரன்வாலே தலைமையில் ஆயுத கிளர்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆயுத கிளர்ச்சியின் தலைமையகமாக இருந்ததுதான் பஞ்சாப் பொற்கோவில். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பிந்தரன்வாலேவின் ஆயுத கிளர்ச்சியை அழித்தொழிக்க இதே பஞ்சாப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரிலான இந்த ராணுவ நடவடிக்கையால் பிந்தரன்வாலே உள்ளிட்ட பெரும்பாலான சீக்கிய ஆயுதம் தாங்கிய அமைப்பினர் அழித்தொழிக்கப்பட்டனர். அப்போது பஞ்சாப் பொற்கோவிலில் ரத்த ஆறு ஓடியது.

 Rahul Gandhi MP offeres Sewa at Golden Punjab Temple

இந்திரா காந்தி படுகொலை: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு பிந்தரன்வாலே உள்ளிட்டோரை இந்திரா காந்தி அழித்தொழித்ததற்கு பழிவாங்கவே அவரை சீக்கியர் பாதுகாவலர்கள் சுட்டுப் படுகொலை செய்தனர். அப்போது ராகுல் காந்தி பிஞ்சு பிள்ளை.

 Rahul Gandhi MP offeres Sewa at Golden Punjab Temple

ராஜீவ் கால சீக்கியர் படுகொலை: இந்திரா காந்தி படுகொலையால் கொந்தளித்து போன காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி உள்ளிட்ட இடங்களில் கண்ணில்பட்ட சீக்கியர்களை எல்லாம் காவு வாங்கினர். பல்லாயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது, ஒரு பெரிய ஆலமரம் விழுகின்றன போது பூமி அதிரத்தானே செய்யும் என ராஜீவ் காந்தி பேசிய பேச்சு சீக்கியர் படுகொலையை நியாயப்படுத்தியிருந்தது. இப்போதும் சீக்கியர் படுகொலை வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்கொண்டுதான் இருக்கின்றனர்.

ராகுல் காந்தி பிராயசித்த சேவை: இப்படி ராகுல் காந்தி குடும்பத்தினருடன் இணைந்த 'ரத்த சம்பவங்களுக்கு' சாட்சியமாக இருப்பதுதான் பஞ்சாப் பொற்கோவில். இந்த பொற்கோவிலுக்கு தனிப்பட்ட முறையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் ராகுல். பஞ்சாப் பொற்கோவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி பக்தர்களுக்கான பாத்திரங்களை கழுவி சேவையும் செய்தார். ஒருவகையில் ராகுல் காந்தி பிராயசித்தத்தை தேடித்தான் இந்த சேவையில் ஈடுபட்டார் என புரிந்து கொள்ளவும் முடிகிறது நம்மால்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+