உலகளவில் மோசமான வரி என்ற பெயரை பெற்றுவிட்டது ஜிஎஸ்டி: ராகுல் கிண்டல்

கப்பார் சிங் டேக்ஸ் என்று மோடி அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி பயங்கரமான வரி என்ற அளவில் உலகில் பெயர் பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி என்று அறிமுகப்படுத்தப்பட்ட கப்பார் சிங் டேக்ஸின் பயங்கர முகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவைகள் வரி கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

Rahul Gandhi says about GST

உலகில் மறைமுக வரியை போன்ற வரிகள் குறித்து உலக வங்கி 115 நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் உலகில் 2-ஆவது மிக உயர்ந்த வரி ஜிஎஸ்டி ஆகும் என்று என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜிஎஸ்டியானது 5 விதமான ஸ்லாப்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதில் 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீம் மற்றும் 28 சதவீதம் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஜிஎஸ்டி ஸ்லாப்களில் உள்ள 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகியவற்றை இணைத்து ஸ்லாப்பை குறைப்பேன் என்று உறுதி அளித்திருந்தார்.

உலக வங்கியின் அறிக்கையை வைத்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கப்பார் சிங் டேக்ஸ் என்பது பயங்கரமானது என்றே உலகம் முழுவதும் பெயர் பெற்றுள்ளது என்று ராகுல் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+