பயம் கண்ணுல தெரியுதே..கொஞ்ச நாளில் அழுவார் பாருங்களேன்! மோடியை கிண்டலடித்த ராகுல் காந்தி.. இப்படியா?
பீஜபூர்: கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையிலேயே கண்ணீர் விட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் லோக் சபா தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக கூட்டணி: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டதால் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜனதா தளம் (எஸ்) மாண்டியா, ஹாசன் மற்றும் கோலார் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பிரதமர் மோடி: இந்த நிலையில் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரச்சாரத்தின் போது இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களை அவர் வெகுவாக விமர்சித்து வருகிறார். சொத்துக்கள் பிரிப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி இந்தியர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் பேசியது பரபரப்பை கிளப்பியது.
ராகுல் காந்தி: மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களை பறித்து ஊடுருவல் காரர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாக பேசியது கடும் கண்டனங்களை பெற்று தந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பிரதமர் நரேந்திர மோடி தான் பேச்சின் போது மிகுந்த பதட்டமாக இருப்பதாக விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் முன்னால் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி. பீஜபூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். இன்னும் சில நாட்களில் மேடையில் தான் பேசும் போது கண்ணீர் விடவும் வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் அரசு: கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே பறித்துள்ளார். நாட்டின் 70 கோடி மக்களிடம் உள்ள செல்வத்தை 22 பேருக்கு வழங்கினார். வேலையில்லாத் திண்டாட்டத்தையும் பணவீக்கத்தையும் நீக்கி காங்கிரஸ் கட்சி உங்களுக்கு பங்களிக்கும். கோடீஸ்வரர்களுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அவ்வளவு பணத்தை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கொடுப்போம். கர்நாடகாவில் காங்கிரஸ் கொடுத்த அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றியுள்ளது. அதன் மூலம் இங்குள்ள மக்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். நரேந்திர மோடி சிலரை கோடீஸ்வரர்களாக்கினார். காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும்" என்று ராகுல் காந்தி கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications