For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி உரையின் போது ராகுல்காந்தி 'தொண தொண' பேச்சு!

பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈ

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையை நிறைவு செய்து கிளம்பும் முன்னரே ராகுல்காந்தி தனது இருக்கையை விட்டு கிளம்பியுள்ளார்.

2018-19ம் நிதியாண்டிற்கான பட்ட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்து முதன் முறையாக உரையாற்றினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Rahul Gandhi seen frequently talking during President’s address at joint Parliament meet

அதன்பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ராம்நாத்கோவிந்த், முத்தலாக் சட்டம், நாடு முழுவதும் 21 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, அரசின் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஆதார் மூலம் நேரடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

இதே போன்று அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய குடியரசுத் தலைவர் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை இருமடங்காக உயர்த்தவும், குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைக்கவும் அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையை அனைவரும் படு சீரியஸாககேட்டுக் கொண்டிருந்தனர்.

குடியரசு தலைவர் வருவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்து சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த முதல் வரிசையில் அமர்ந்தார். மேலும் குடியரசு தலைவர் உரையின்பொழுது, ராகுல் காந்தி தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியபடியே இருந்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு கை தட்டல்கள் எழுந்த பொழுதும் ராகுல் காந்தி அதில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடியரசு தலைவர் உரை முடிந்தபின் சோனியா காந்தி தனது மேஜையில் தட்டிய நிலையிலும் எதிலும் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி, உரை முடிந்து குடியரசு தலைவர் செல்வதற்கு முன் எழுந்து சென்றார்.

English summary
Newly-elected Congress president Rahul Gandhi, seated in the front row during President Ram Nath Kovind’s address at the joint sitting of Parliament was seen frequently talking to party leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X