நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் ராகுல் காந்தி.. வரிந்து கட்டி ஆதரிக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, பிசியோதெரபி படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருந்தன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயமாகிவிட்டது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வால் தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு பாதிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தும் வருகிறது. இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், பிசியோதெரபி படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதை கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு ஆதரிப்பதாக அம்மாநில அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பெங்களூரில் நடைபெற்ற பிசியோதெரபி குறித்த மாநாட்டில் பேசிய அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல், மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிசியோதெரபி படிப்புக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். நீட் தேர்வுகள், கல்வியின் தரத்தை உயர்த்துகின்றன என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய துணை சுகாதார ஆணையத் தலைவர் யக்ன சுக்லா, பிசியோதெரபி படிப்புக்கு ஒரே நாடு- ஒரே பாடத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனால் அந்தப் படிப்பின் தரம் உயரும் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications