நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களை கேவலப்படுத்துகிறார் மோகன் பகவத்... ராகுல் கண்டனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு தேசியக்கொடியையும், ராணுவ வீரர்களையும் அவமானப்படுத்துவது. உங்களுக்கு இது அவமானமாக இல்லையா மோகன் பகவத் என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் போர் ஏற்பாட்டால் ராணுவத்தை விட 3 மாதத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தயாராகி விடுவார்கள் என்று அதன் தலைவர் மோகன் பகவத் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கர்நாடக காங்கிரஸ் அமைப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது

Rahulgandhi and Karnataka congress slams Mohan bhagawat

மோகன் பகவத்தின் சர்ச்சை பேச்சு குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி "ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் நாட்டிற்காக போராடி உயிரை விட்ட ஒவ்வொருவரையும் அவமரியாதை செய்வது போல உள்ளது அவரின் பேச்சு."

மோகன் பகவத் நமது தேசியக்கொடியை மட்டுமல்ல ராணுவ வீரர்களையும் அவமானப்படுத்தியுள்ளார். நமது ராணுவ வீரர்களையும் ராணுவத்தையும் அவமரியாதை செய்வது உங்களுக்கு அவமானம் என்றும் மோகன்பகவத்தை ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். மன்னிப்பு கேள் ஆர்எஸ்எஸ் என்ற ஹேஷ்டேகையும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார்.

இதே போன்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியும் டுவிட்டரில் மோகன் பகவத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், பல ஆண்டுகளாக தேசிய கொடியை ஏற்றாத துரோகிகள் நமது இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார்கள். மிஸ்டர் பகவத் உங்களுக்கு அவமானமாக இல்லையா, ஆர்எஸ்எஸ் ராணுவத்தை அவமதிக்கிறது என்ற ஹேஷ்டேகுடன் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rahul Gandhi and Congress' Karnataka unit have criticised RSS chief Mohan Bhagwat over his comment about the Army and RSS's capacity.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற