For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தான் தேர்தல்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. பாஜக அதிரடி வாக்குறுதி!

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 5 வருடத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் இந்தியாவில் நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுக்காக தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஏற்கனவே சட்டிஸ்கர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

Rajasthan assembly elections 2018: BJP manifesto focuses on employment for youths

இன்னும் தெலுங்கானா, மத்திய பிரதேம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் ராஜஸ்தான் அதிக கவனம் பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ராஜஸ்தான் தேர்தலுக்காக பாஜக தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பாஜக சார்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையை வெளியிட்டார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில் சில கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

1. அடுத்த 5 வருடத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

2. இளைஞர்களுக்கு வருடத்திற்கு 30 ஆயிரம் என்று 1.50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை அளிக்கப்படும்.

3. தகுதிவாய்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படும்.

ஆகிய மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை தேடும் இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை குறிவைத்து இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த வாக்குறுதிகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Rajasthan assembly elections 2018: BJP manifesto focuses on employment for youths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X