பேசி தீர்க்கலாம் வாங்க.. மணிப்பூர் போராளிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைப்பு
இம்பால்: ‛‛வன்முறையை கைவிட்டுவிட்டு அமைதி பேச்சுக்கு வாருங்கள். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது'' என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மணிப்பூர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் உள்ளன. உத்தரகாண்ட், கோவாவில் நேற்று தேர்தல்கள் முடிவடைந்தன.
பஞ்சாப், மணிப்பூரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூருக்கு பிப்.,28 ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பால் மாவட்டம் லான்தபால் பகுதியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:

பேச்சுவார்த்தைக்கு தயார்
மணிப்பூர் போராளிகள் வன்முறைறை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வன்முறை குறைந்துள்ளது. வன்முறையை முற்றிலும் குறைத்து அமைதி, வளர்ச்சியை கொண்டுவர பாஜக அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, மாநிலத்துக்கான சுற்றுலா வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

மெஜாரிட்டியுடன் வெற்றி
வரும் தேர்தலில் பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத திட்டங்களினால் நாட்டின் பிறபகுதிகளை ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின்றி இருந்தன.

வாஜ்பாய் காலம்
இந்த பிராந்தியத்தை காங்கிரஸ் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வளர்ச்சிக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதன்பின் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மீண்டும் மாநிலம் ஒதுக்கப்பட்டது.

வளர்ச்சி பாதையில்...
2017 ல் மாநிலத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு வளர்ச்சி பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்குமுன் கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. பாஜக கட்சி தலைமையின் கீழ் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications