For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தியில் ராமர் கோயில்... வெள்ளி செங்கற்கள் ரெடி... 3 நாட்கள் பிரம்மாண்ட பூஜை!!

ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பாஜகவும், நாடும் தயாராகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்த

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் 300 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆடி அமாவாசை : திருச்செந்தூர், திருவேடகம், சுருளி அருவியில் தடையை மீறி வந்த மக்களை தடுத்த போலீஸ் ஆடி அமாவாசை : திருச்செந்தூர், திருவேடகம், சுருளி அருவியில் தடையை மீறி வந்த மக்களை தடுத்த போலீஸ்

வேதமந்திரங்கள் முழங்க பூஜை:

வேதமந்திரங்கள் முழங்க பூஜை:

அடிக்கல் நாட்டு விழா மூன்று நாட்கள் பூஜையாக நடக்கவிருக்கிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி வேத மந்திரங்கள் ஓதப்படும். ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராமாச்சாரியா பூஜா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா மதியம் 12.15 மணிக்கு நடக்கிறது. அயோத்திக்கு வருவது இது மோடியின் முதல் பயணமாகும். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் துவங்கப்பட்டது. இந்த டிரஸ்டை பிரதமர் மோடிதான் அறிவித்து இருந்தார்.

எண்கோண கர்ப்பகிரகம்:

எண்கோண கர்ப்பகிரகம்:

அடிக்கல் நாட்டு விழாவின்போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியினால் ஆன 5 செங்கல்கள் பதிக்கப்படும். இந்து வேதத்தில் ஐந்து கோள்களைக் குறிக்கும் வகையில் இந்த ஐந்து செங்கல்கள் பாதிக்கப்படுகிறது. கர்ப்ப கிரகம் எண்கோண வடிவில் அமைக்கப்படும். விஷ்ணு கோயிலைப் போன்று வடஇந்திய ஸ்டைலில் கோயில் அமைக்கப்படுகிறது.

ஐந்து குவிமாடங்கள்:

ஐந்து குவிமாடங்கள்:

முன்பு மூன்று குவிமாடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஐந்து குவிமாடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பரப்பளவு 76,000 முதல் 84,000 சதுர அடியாக இருக்கும். முன்பு 38,000 சதுர அடி என்று கணக்கிடப்பட்டு இருந்தது.

பால் தாக்கரேவும் அயோத்தியும்:

பால் தாக்கரேவும் அயோத்தியும்:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெயரும் இடம் பெற்று இருந்தது. அவர் இறந்த பின்னர் அவரது பெயர் நீக்கப்பட்டது. அவர் இருக்கும் வரை இந்து மதத்துக்கு ஆதரவாகவும், அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஆதரவும் அளித்து வந்தார்.

தீர்ப்புக்குப் பின்னர், இந்த வகையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று இருந்தார். அயோத்தி கோயில் கட்டுவதற்கு சிவசேனா சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். பாஜகவில் இருந்து பிரிந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தாலும், இந்துத்துவாவை சிவசேனா ஆதரித்து வருகிறது. காங்கிரஸ், தேசியவாதக் கட்சிகளுடன் கரம் கோர்த்து ஆட்சி அமைத்து இருந்தாலும், அவர்களது கொள்கைகளில் இருந்து முழுக்க வெளிவரவில்லை.

English summary
Silver Bricks to 'Bhumi Pujan' for Ayodhya's Ram Mandir on August 5th PM Modi participates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X