For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாமை போல் ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்துக்கு நோ சொன்ன ராம்நாத் கோவிந்த்

கலாமை போல் ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்துக்கு ராம்நாத் கோவிந்த் இல்லை என்று கூறிவிட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : அப்துல் கலாமை போல் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இப்தார் விருந்து அளிக்கும் பழக்கத்தை கைவிட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் மதசார்பற்ற தன்மை கடைபிடிக்கப்படுவதால் அங்கு கிறிஸ்துமஸ், இப்தார் நோன்பு போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம்.

Ramnath Govind says no to Iftar party at Rashtrapati Bhavan

பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதிகளாக இருந்த காலத்தில் இப்தார் நோன்பு, கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியன கொண்டாடப்பட்டது. ஒரு ஆண்டு கூட இவற்றை கொண்டாடாமல் இருந்தது இல்லை.

ஆனால் அப்துல் கலாம் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்ட 2002-2007-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிட்டார். அதற்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக கொடுத்துவிடுவது வழக்கம்.

அதுபோல் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தும் இந்த ஆண்டு இப்தார் நோன்பு கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் அலவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகையில், இந்தியா மதசார்பற்ற நாடு என்பதற்கான அடையாளம் ஜனாதிபதி மாளிகையாகும்.

மத ரீதியிலான விஷயங்களும் ஆளுமை இங்கு தனித்தியாகும். பொதுமக்கள் வரிப்பணத்தில் எந்த மதத்தின் சார்பிலும் நிகழ்ச்சி ஏதும் கொண்டாடப்படாது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இப்தார் நோன்பு விழாவுக்கு செலவிடும் பணத்தை ஆதரவற்றோருக்கு செலவிடப்படலாம் என்று தெரிகிறது. கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையும் இங்கு கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
President Ram Nath Kovind has decided to not conducting Iftar Party at his office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X