ரேஷன் ஊழல்: மமதா பானர்ஜியின் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையால் அதிகாலையில் அதிரடி கைது!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா ( ஜோதி பிரியா) மல்லிக் ரேஷன் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார் ஜோதிப்ரியா மல்லிக். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு செய்தார்; அதில் சட்டவிரோத பணப் பரிப்பாற்றம் நடந்தது என்பது ஜோதிப்ரியா மல்லிக் மீதான அமலாக்கத்துறை வழக்கு.

ஜோதிப்ரியா மல்லிக் மீதான இந்த வழக்கில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில் இந்த சோதனைகள் நடைபெற்றன. அவரது உதவியாளர் உள்ளிட்ட 8 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.
இந்த விசாரணைகளுக்குப் பின்னர் இன்று அதிகாலையில் ஜோதிப்ரியா மல்லிக், அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிப்ரியா மல்லிக் , மிகப் பெரிய சதிக்கு பலிகடாவாக்கப்பட்டுள்ளே என குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மமதா பானர்ஜி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வழக்குகளை பலரும் எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு அமைச்சரான ஜோதிப்ரியா மல்லிக் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டு கூடுதல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications