'பிளாக்' திமிங்கலங்களின் முதல் புகலிடம் ரியல் எஸ்டேட்.. கடைசிப் புகலிடம் தங்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கையில் நாலு காசு இருந்தால் நல்லதா ஒரு டிரஸ் எடுக்கலாம், ஹோட்டலில் போய் குடும்பத்தோடு நன்றாக சாப்பிடலாம் என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால் இந்த கருப்புப் பண முதலைகளின் எண்ணமே வேறு.. மாற்றித்தான் யோசிப்பார்கள்.

பெரும்பாலான கருப்புப் பண முதலைகள், ரியல் எஸ்டேட்டில்தான் கள்ளப் பணத்தை முதலீடு செய்கிறார்களாம். ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்து கருப்புப் பணத்தை மேலும் பல மடங்கு பல்கிப் பெருக வைக்கிறார்கள். வெள்ளையாகவும் மாற்றி விடுகிறார்கள்.

இதேபோல மேலும் பல துறைகளிலும் கருப்புப் பணத்தை முதலீடு செய்து மேலும் மேலும் கொழுத்து வருகிறார்கள் இந்த கருப்புப் பணக் கொள்ளையர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

முதலில் வெளியே வந்த 3 முதலைகள்

முதலில் வெளியே வந்த 3 முதலைகள்

சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 கருப்புப் பண முதலைகளின் பெயர்களை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

"டாபர்" பர்மன் - "பில்டர்" லோதியா - "மைனர்" டிம்போலோ

டாபர் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த சுரங்க ஆலை அதிபர் ராதா எஸ். டிம்போலா ஆகியோரே அந்த மூன்று முதலைகள்.

ஒரு அரசியல்வாதியும் இல்லையா

ஒரு அரசியல்வாதியும் இல்லையா

மத்திய அரசு மிகவும் பாதுகாப்பான முறையில் மூன்று அரசியல் சாரா முதலைகளை மட்டும் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு அரசியல்வாதியையும் இதுவரை அரசு அம்பலப்படுத்தாதது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேட்டால் இப்படிச் சொல்கிறது அரசு

கேட்டால் இப்படிச் சொல்கிறது அரசு

இதுகுறித்து அரசு அளித்துள்ள விளக்கத்தில் வெளிநாடுகளில் பணம் போட்டு வைத்திருக்கும் அத்தனை பேரையும் வெளிப்படுத்த முடியாது. அவர்களின் பணம் உரிய முறையில் சம்பாதிக்கப்பட்டதா என்பதை ஆராய்வோம், அது கருப்புப் பணம்தான் என்பது உறுதியானால் மட்டுமே வெளியிடுவோம் என்று அரசு கூறுகிறது.

அசோசாமின் மறைமுக மிரட்டல்

அசோசாமின் மறைமுக மிரட்டல்

இன்னொரு பக்கம் கருப்புப் பண முதலைகளின் பெயர்களை அரசு வெளியிடுவதற்கு அசோசாம் என்ற இந்தியாவின் முக்கிய வர்த்தக சபை எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

பல லட்சம் கோடிகள்

பல லட்சம் கோடிகள்

இது ஒரு புறம் இருக்க வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கருப்புப் பணம் உறங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 28 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கருப்புப் பணம் உள்ளதாக வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஏற்கனவே கூறியிருந்தது.

ஆனால் பாஜக கணக்குப்படி ரூ. 86 லட்சம் கோடி

ஆனால் பாஜக கணக்குப்படி ரூ. 86 லட்சம் கோடி

தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக இருந்தவர் சந்தீப் சக்சேனா

பலே பல்டி

பலே பல்டி

ஆனால் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்ததும் கருப்புப் பண முதலைகளை அப்படியே அம்பலப்படுத்தும் என்று பார்த்தால் காங்கிரஸை விட படு மோசமான வேகத்தில் அது செயல்பட்டு வருகிறது. பார்த்துப் பார்த்துப் பேசுகிறது. காங்கிரஸே பாஜகவை சீண்டும் அளவுக்கு பாஜகவின் வேகம் உள்ளது.

வரி விதிப்பைத் தவிர்க்க

வரி விதிப்பைத் தவிர்க்க

பெரும்பாலும் வரி விதிப்பைத் தவிர்த்து பணத்தைப் பாதுகாப்பதே இந்த கருப்புப் பண முதலைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. வரி ஏய்ப்பின் மூலம் இவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறார்கள்.

கிரிமினல் தொடர்புகள்

கிரிமினல் தொடர்புகள்

மேலும் கருப்புப் பண முதலைகள் பலருக்கு கிரிமினல் தொடர்புகள் இருப்பதும் உண்டு. இதன் மூலமாக கிடைக்கும் பணத்தையும் அவர்கள் ரகசியமாக பதுக்குகிறார்கள்.

ரியல் எஸ்டேட்டில் கொட்டுகிறார்கள்

ரியல் எஸ்டேட்டில் கொட்டுகிறார்கள்

இந்தியாவின் கருப்புப் பணப் பரிவர்த்தனைகளில் மூன்றில் ஒரு பங்குப் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

உற்பத்திப் பிரிவு

உற்பத்திப் பிரிவு

அடுத்து உற்பத்தித் துறையில் குவிக்கப்படுகிறது. தங்க வியாபாரத்திலும் முதலீடு செய்யப்படுகிறது. நுகர்வோர் பொருள் துறையிலும் கருப்புப் பண புழக்கம் அதிகமாக உள்ளது.

பதுங்கும் பாஜக

பதுங்கும் பாஜக

கருப்புப் பண முதலைகளை அம்பலப்படுத்த பாஜக தயங்குகிறது. இதற்கு பாஜகவுக்குள்ளேயே கூட எதிர்ப்பு உள்ளது. முன்பு வீராப்பாக பேசி விட்டு இப்போது பதுங்கினால் கட்சியின் பெயர் கெட்டு விடும் என்ற கருத்து பாஜகவுக்குள்ளேயே இருக்கிறது.

சீண்டும் காங்கிரஸ்

சீண்டும் காங்கிரஸ்

மறுபக்கம், பாஜக இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அத்தனை பேரையும் அது அம்பலப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. ஆள் பார்த்து பெயர்களை வெளியிடுவதற்கு அது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மக்கள் எதிர்பார்ப்பு இதுதான்

மக்கள் எதிர்பார்ப்பு இதுதான்

கருப்புப் பண முதலைகள் யாராக இருந்தாலும் சரி அவர்களை அம்பலப்படுத்த வேண்டும், அவர்கள் குவித்துள்ளதை பாரபட்சம் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+