நீத்தா பிறந்தநாள் கொண்டாட்டம்: 4 விமானங்களில் வாரணாசி பறந்த அம்பானி அன்ட் கோ

Subscribe to Oneindia Tamil

வாரணாசி: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி நீத்தாவின் பிறந்தநாளை வாரணாசியில் கொண்டாடினார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா கடந்த 1ம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை நீத்தா உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோவில் நகரமான வாரணாசியில் கொண்டாடினார்.

சனிக்கிழமை அம்பானி குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் 4 விமானங்களில் மும்பையில் இருந்து வாரணாசி வந்தனர்.

வரவேற்பு

வரவேற்பு

வாரணாசி வந்த அம்பானிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட நீதிபதி, கமிஷனர், ஐ.ஜி ஆகியோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில்

காசி விஸ்வநாதர் கோவில்

விமான நிலையித்தில் இருந்து 40 சொகுசு கார்களில் தாஜ் கேட்வே ஹோட்டலின் ஒரு பகுதியான நடேசர் பேலஸுக்கு அம்பானிகள் சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு அவர்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். சொகுசு கார்கள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன.

கங்கா ஆர்த்தி

கங்கா ஆர்த்தி

நீத்தா தனது கணவர் முகேஷ், மகன்கள் ஆகாஷ், ஆனந்த், மகள் இஷா, மாமியார் கோகிலாபென் ஆகியோருடன் சேர்ந்து கங்கை ஆர்த்தி காட்டினார்.

சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

காசி விஸ்வநாதர் கோவிலில் நீத்தாவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையை பத்மஸ்ரீ போராசிரியர் தேவி பிரசாத் திவேதி மற்றும் 11 சாஸ்திரிகள் சேர்ந்து செய்தனர்.

படகு சவாரி

படகு சவாரி

பூஜை எல்லாம் முடிந்த பிறகு அலங்கரிக்கப்பட்ட நான்கு படகுகளில் அம்பானிகள் கங்கையில் சவாரி செய்தனர். அதன் பிறகு நடேசர் பேலஸில் நீத்தா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+