For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் எம்.பியை சூர்பனகையுடன் ஒப்பிட்ட மோடி.. வைரல் ஆன மூக்கறுப்பு வீடியோ!

பிரதமர் மோடி நேற்று ராஜ்ய சபாவில் பேசும் போது அவரைக் கிண்டல் செய்து ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சிரித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் பேசினார். காங்கிரஸ் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு அமைதியாக இருக்க சொல்லியும் அவர் கேட்கவில்லை.

அவரிடம் ''உடனடியாக சிரிப்பு சத்தத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவமனை செல்லுங்கள்'' என்று கோபமாக குறிப்பிட்டார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

பேச்சு விவரம்

பேச்சு விவரம்

உடனே மோடி ''அவர் நன்றாகச் சிரிக்கட்டும். அவரை யாரும் தடுக்காதீர்கள். ராமாயணத்தில் சிலர் இப்படித்தான் சிரித்தார்கள். அதற்குப் பின் இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து இருக்கிறேன்'' என்று கிண்டலாக குறிப்பிட்டார். அவர் எந்த ராமாயண கதாப்பாத்திரத்தை குறிப்பிட்டார் என்று சொல்லவில்லை.

சூர்பனகை தான்

தற்போது ரேணுகாவை சூர்பனகையுடன் ஒப்பிட்டு மோடி குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் சிரிப்பதை போலவே சூர்பனகை ராமாயண் நாடகத்தில் சிரிக்கிறார். அதைத்தான் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகியுள்ளது.

மிகவும் தவறு

இவர் ''ரேணுகா சிரித்தது சரியான முறை இல்லை. அவர் மிகவும் மோசமாக கத்துகிறார். அவருக்கு இது தேவைதான். மோடி அவருக்கு ராமாயண எடுத்துக்காட்டு மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இல்லை

இவர் ''ரேணுகாதான் தானாக அது சூர்பனகை குறித்து சொன்னது என்று நினைத்துக் கொள்கிறார். மோடி வெறுமனே ராமாயணம் என்று தான் குறிப்பிட்டார். இவர்களே என்னென்னமோ நினைத்துக் கொள்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Congress MP Renuka Chowdhury mocks Modi with her hilarious laugh in Rajya Sabha yesterday. Renuka says that, she smiled at him because, he talked so funny. Renuka Chowdhury becomes viral after Modi's Ramayan comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X