For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.

ATM

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.

தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது.

ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.

இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

English summary
Now, if the total number of transaction at other banks' ATMs exceeds three, a fee will be deducted from your savings account - Rs 26 for each cash withdrawal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X