தாய் மொழியில் பேச கூடாது.. தாலி, குங்குமம் கூடாது.. குல்பூஷன் ஜாதவின் மனைவிக்கு பாக். கெடுபிடி
குல்பூஷன் ஜாதவை பார்க்க சென்ற அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: குல்பூஷன் ஜாதவை பார்க்க சென்ற அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவரது மனைவி அணிந்து இருந்த தாலியை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கழட்ட சொல்லி இருக்கின்றனர்.
பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.

இவரது மரண தண்டனை சர்வதேச நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜாதவ் பெரும் போராட்டத்திற்கு பின் தன் குடும்பத்தினரை நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சேத்தன்குல்லின் தாலி, வளையல், தோடு ஆகியவற்றை கழட்ட சொல்லி உள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் பெண்கள் இருப்பது போல் தலையை சுற்றி புடவையை சுற்றிக்கொள்ள சொல்லியுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில் பேசுவதற்கு கூட அனுமதிக்க படவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் இதுகுறித்து கூறும் போது ''பாதுகாப்பு காரணங்கள் கருதியும், எங்கள் நாட்டின் புரிதலுக்காகவுமே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது'' என்று கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications