ஹாலிவுட் ஸ்டைலில் சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் கொள்ளை– ஹரியானா வங்கியில் பகீர் திருட்டு!
ஹோகனா: ஹரியானவில் சுரங்கம் அமைத்து வங்கியில் உள்ள பணம், நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஹோகானா நகரில் உள்ளது பஞ்சாப் தேசிய வங்கி. வங்கியின் மறுபுறம் ரோட்டை கடந்து பல மாடி கட்டிடம் உள்ளது.
அங்கு இருந்து 125 அடி நீளத்திலும், 2.5 அடி விட்டத்திலும் சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வங்கிக்குள் கடந்த சனிக்கிழமை இரவு புகுந்து உள்ளனர்.
கொள்ளை போன பணம்,நகை:
அங்கு இருந்த லாக்கரை உடைத்து கோடிக்கணக்கான் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
உலுக்கி எடுக்கும் கொள்ளை:
சமீபத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இது மிகப்பெரிய கொள்ளை சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்த தகவல் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வெளியே தெரியவந்தது. கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சுரங்கப்பாதையை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மூன்று அறைகளில் சுரங்கம்:
சுரங்கபாதை கட்டிடத்தின் 3 அறைகளில் சுரங்கம் தோண்டும் பணியை செய்து உள்ளனர். அது யாருக்கும் தெரியாமல் நீண்ட நாட்களாக நடைபெற்று இருந்து இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெட்டக அறையில் சுரங்கம்:
சுரங்கபாதை சரியாக வங்கியின் பெட்டக அறைக்கு வந்து உள்ளது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த கம்பிகளை முற்றிலுமாக தகர்த்து உள்ளனர்.
360 லாக்கர்கள் உடைப்பு:
வங்கி அதிகாரிகள் 90 முதல் 360 லாக்கர்களை கொள்ளையர்கள் உடைத்து உள்ளதாக தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை குறித்து அதிகாரிகள் மதிப்பிட்டு வருகிறார்கள்.
பலநாள் திட்டம்:
இந்த கொள்ளை குறித்து கடந்த சில மாதங்களாக கொள்ளையர்கள் திட்டமிட்டு வந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications