நிலக்கொள்ளை விவகாரம்... விசாரணைக்கு நான் "ரெடி"- சொல்வது சோனியா மருமகன் வதேரா
டெல்லி: அரசு மற்றும் விவசாயிகளின் நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கி பெரிய நிறுவனங்களுக்கு பெருந்தொகைக்கு விற்பனை செய்தது தொடர்பாக ஹரியானா அரசு தம் மீது நடத்தும் விசாரணையை எதிர்கொள்ள தயார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஏராளமான அரசு நிலங்களை வாங்கிக் குவித்தார். அதேபோல் விவசாயிகளிடமும் சொற்ப விலைக்கு நிலங்களை அபகரித்தார்.

இந்த மாநிலங்களில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் துணை கொண்டு அவரால் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைக்க முடிந்தது. ராபர்ட் வதேரா வாங்கிய நிலங்கள் அரசிடம் இருந்து மிக மிக குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அவர் அதிக விலைக்கு பெரிய நிறுவனங்களுக்கு விற்றுள்ளார்.
இந்த நில பேரங்களில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஹரியானா அரசு விசாரணைகுழு அமைத்தது உள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திங்ரா கமிஷன் இந்த விசாரணையை நடத்த இருக்கிறது.
இப்படி ஹரியானாவின் ஆளும் பாரதிய ஜனதா அரசு தம் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து ராபர்ட் வதேரா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஹரியானா மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த விசாரணை கமிஷனின் அறிக்கை வெளியாகும்வரை காத்திருப்போம். ஹரியானா அரசின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதில் எனக்கோ, என்னை சார்ந்த மற்ற யாருக்குமோ தொடர்பு இல்லை.
ஹரியானா அரசின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் எல்லாமே நடைபெற்றது. இந்த விசாரணையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு துணை போகாது என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications