ரோஹன் எப்போதும் சிரித்து கொண்டே இரு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இதய சிகிச்சை மேற்கொண்டு பூரண நலம் பெற்ற பாகிஸ்தான் குழந்தை நீடுழி வாழ வாழ்த்து கூறிய சுஷ்மா ஸ்வராஜ் அவர் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சித்திக் கன்வால் - ஆனம் தம்பதியின் நான்கு மாத மகன் ரோஹனுக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. பாகிஸ்தானில் இதற்கான சிகிச்சை வசதி இல்லை.

 Rohan always keep smiling

இதையடுத்து வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்படி பெற்றோரிடம் மருத்துவர்கள் வலியுறுத்தினர். எனினும் எல்லையில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, தம்பதிக்கு விசா அளிக்க இந்திய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதனால் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாரஜ் உதவியை நாடினர். சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டதன் பேரில் விசா வழங்கப்பட்டது. இந்தியா வந்த அவர்கள் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த ரோஹனின் பெற்றோர் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ரோஹன் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் சுஷ்மா, எப்போழுதும் சிரித்துக்கொண்டே இரு என்றும், நீடுழி வாழ வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Four-month-old Rohan from Pakistan was battling for his life and required a heart operation. India opened its doors to the baby not minding the on-going tensions with Pakistan. Parents of Rohan thanked Sushma Swaraj for her help. She wished Rohan to keep smiling.
Please Wait while comments are loading...