என்கவுண்டர் பூமியான உத்தர பிரதேசம்.. உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தூங்கும் ரவுடிகள்!

உத்தர பிரதேசத்தில் போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் போலீஸ் நிலையத்திலேயே தூங்கி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தூங்கும் ரவுடிகள்!

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் போலீஸ் நிலையத்திலேயே தூங்கி வருகின்றனர்.

    மேலும் இவர்கள் போலீஸ் நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறார்கள். உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி கடந்த ஒரு வருடத்தில் 1,144 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.

    கொடுமை

    கொடுமை

    இதில் பலர் சாதாரணமாக கொலை செய்யப்படுவதில்லை. என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு உடல் எலும்புகள் உடைந்து இருக்கிறது. சிலரின் கைகள் தீயில் பொசுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மோசமான சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறது.

    ரவுடிகள் பயம்

    ரவுடிகள் பயம்

    மனித உரிமைகள் ஆணையம் இதுவரை இதில் பெரிய கேள்விகள் எதுவும் எழுப்பவில்லை. அதேசமயம் ரவுடிகள் பலர் திருந்தி வருவதாக கூறப்படுகிறது. பல ரவுடிகள் போலீஸ் நடத்தி வரும் விசாரணையில் தானாக சரண்டர் ஆகி வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். மரணத்திற்கு பயந்து இவர்கள் இப்படி செய்கிறார்கள்.

    உறுதி மொழி எடுக்கிறார்கள்

    உறுதி மொழி எடுக்கிறார்கள்

    அதன்படி இதில் 30க்கும் அதிகமான மோசமான ரவுடிகள் இன்னும் வெளியே சுற்றுவதாக கூறப்படுகிறது. இவர்கள் தற்போது நாங்கள் குற்றமே செய்யப்போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துள்ளார்கள். இவர்கள் லாஹார்புர் கொத்வாலி காவல்நிலையத்திற்கு சென்று உறுதி மொழி எடுத்துள்ளார்கள். இனி மக்களுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டோம் என்றுள்ளனர்.

    போலீஸ் நிலைய தூக்கம்

    போலீஸ் நிலைய தூக்கம்

    அதோடு இவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் படுத்து தூங்குவதும் நடந்துள்ளது. வெளியே சுற்றினால், வேறு குற்றம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்படலாம் என்று இவர்கள் இப்படி செய்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் கொல்லப்பட்ட பலர், செய்யாத குற்றத்திற்காக கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இவர்கள் போலீஸ் நிலையத்திலேயே தூங்கி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+