தெலுங்கானாவுக்கு 6.. சத்தீஸ்கருக்கு 8 அதிரடி வாக்குறுதிகள்.. பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 8 வாக்குறுதிகளை வழங்கி உள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7, நவம்பர் 17 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் களம் காண்கிறது.

கர்நாடகாவில் 5 வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். தெலுங்கானாவில் 6 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது காங்கிரஸ். இதே பாணியை சத்தீஸ்கரிலும் பின்பற்றுகிறது காங்கிரஸ்.
சத்தீஸ்கர் நிலவரம்: சத்தீஸ்கர் தேர்தலைப் பொறுத்தவரையில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்பதே பொதுவான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றலாம் என கனவு காண்கிறது.
பிரியங்கா பிரசாரம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தார். இந்த பிரசாரக் கூட்டங்களில் பிரியங்கா காந்தி பேசியதாவது: இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது நானும் ராகுல் காந்தியும் பள்ளியில் படித்து கொண்டு இருந்தோம். எங்கள் அப்பா ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தார், அம்மா மருத்துவமனையில் இருந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தைக்கு அதேதான் நடந்தது; இத்தனைக்கும் பிறகும் இந்த நாடு மீதான என் நம்பிக்கை மற்றும் iந்த நாடு மீதான தேசபக்தி குறையவில்லை. நாம் நம் தலைமுறைகளைப் பற்றி பேசும் போது, நம்மை விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். இது குடும்ப அரசியல் அல்ல, இது நாட்டின் மீதான பக்தி - இதை எவராலும் எளிதாக உடைக்க முடியாது.
அதிரடி வாக்குறுதிகள்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் போது சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும்; 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்; அதிக உபயோகத்தில் மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம்; மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் சக்ஷம் திட்டத்தின் கீழ் பெற்ற கடன்கள் தள்ளுபடி; 700 புதிய கிராமப்புற தொழில் பூங்காக்கள் நிறுவுதல் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். சுவாமி ஆத்மானந்த் அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். சாலை மற்றும் விபத்து விபத்துகளில் இலவச சிகிச்சை வழங்கப்படும். 'திவரா' பயிர் குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) வாங்கப்படும் .
மோடி அரசு மீது தாக்கு: இந்த நாட்டின் செல்வத்தை அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கு மோடி அரசு வழங்கி வருகிறது. BHEL, HAL, ரயில்வே... எங்கிருந்து எல்லாம் வேலை கிடைத்ததோ, அந்த சொத்துக்களை எல்லாம் தங்கள் நண்பர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்தார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications