'ராஜஸ்தான் ஆளும் காங்கிரஸில் மீண்டும் மோதல்! முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் ஆவேசம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அம்மாநில அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தமது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைகூட அவ்வப்போது உருவாவது வழக்கம்.

காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதாக அறிவித்த போது இந்த மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கே போட்டியிடாத நிலைமையும் உருவானது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முந்தைய பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்கள் மீது ஏன் முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சச்சின் பைலட்டின் கேள்வி.
மேலும் வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை வைத்தோம். இந்த நிமிடம் வரை அசோக் கெலாட் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அப்படியானால் மக்கள் எப்படி காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைப்பார்கள்? என்றார் சச்சின் பைல்ட்.

அதே போல மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மீதும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்தால்தான் மக்கள் நம்புவார்கள். இதை முதல்வர் அசோக் கெலாட் செய்யவில்லை எனவும் சச்சின் பைலட் சீறினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை மாற்ற வேண்டும் என்ற சச்சின் தரப்பு கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் கிடப்பில் போட்டு கொண்டே வருகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக மீண்டும் வெடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications