பாஜக நினைச்சது நடக்குதே? "இந்தியா" கூட்டணிக்குள் சலசலப்பு.. ம.பியில் வேட்பாளர்களை அறிவித்த சமாஜ்வாடி
இம்பால்: மத்திய பிரதேசத்தில் 'இந்தியா கூட்டணி'யில் இடம் பெற்றுள்ள இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸ் - சமாஜ்வாடி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி 31 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதேபோல், உத்தர பிரதேசத்தில் 80 லோக்சபா தெகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என அகிலேஷ் யாதவும் நேற்று கூறியிருந்தார்.
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும், பாஜக நடத்திய ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் கை கோர்த்தார்.

இதனால், கடந்த 2020 மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைத்தது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
'இந்தியா' கூட்டணி: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரசும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகளும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று சொல்கின்றன. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக செமி பைனல் போல நடைபெறும் ஐந்து மாநில தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் கை கோர்த்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.
சமாஜ்வாடி கட்சி: எனினும், இந்தியா கூட்டணி தேர்தலுக்கு முன் சிதறும் எனவும் பாஜக தலைவர்கள் விமர்சிக்காமல் இல்லை. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்குள் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸ் அங்குள்ள 230 தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சி 5-6 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரித்து இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், சமாஜ்வாடி கட்சி தனியாக வேட்பாளரை அறிவித்தது. அண்மையில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில், மேலும் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வேட்பாளர்கள் அறிவிப்பு: இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், மத்திய பிரதேசத்தில் 5-6 தொகுதிகளுடன் போட்டியிட சமாஜ்வாடி விரும்பியது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பாக சமாஜ்வாடி கட்சி சில இடங்களில் வென்றுள்ளது" என்றார். அண்மையில்தான், உத்தர பிரதேசத்தில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று அகிலேஷ்யாதவ் அறிவித்த மறுநாளே மேலும் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாடி அறிவித்துள்ளது.
கூட்டணிக்குள் சலசலப்பு?: எனினும், இது குறித்து காங்கிரஸ் மேலிட தலைமை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் எந்த ஆதரவும் இல்லை. அம்மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு இருந்த ஒரே ஒரு எம்.எல்.ஏவும் பாஜகவில் சேர்ந்து விட்டார். தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த பிறகு தேர்தல் புரிந்துணர்வு எட்டும்" என்றார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாடி தனித்தனியே வேட்பாளரை நிறுத்தியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications