உபி இடைத்தேர்தலில் இமாலய வெற்றி.. மாயாவதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் அகிலேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியதை தொடர்ந்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை அகிலேஷ் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர், புல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

Samajwadi Party President Akhilesh Thanks Mayawati

அவர்கள் இருவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இரு மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெற்றது. புல்பூர் மக்களவை தொகுதியில் 59000 வாக்குகள் வித்தியாசத்திலும் கோரக்பூர் தொகுதியில் 21000 வாக்குகள் வித்தியாசத்திலும் இந்த சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதன்மூலம் இந்த கூட்டணி எதிர்காலத்திலும் நீடிக்கும் என தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Samajwadi Party President Akhilesh Yadav Meets BSP supremo Mayawati's residence after the two party defeated BJP in Gorakhpur and Phulpur. Samajwadi Party President Akhilesh Thanks Mayawati.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற