கல்பர்கி, தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டது ஒரே ரக துப்பாக்கி!
பெங்களூரு: முற்போக்குவாதிகளான எம்.எம்.கல்பர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரே ரக துப்பாக்கியால்தான் என்று கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் இவர்களை திட்டமிட்டு ஒரே கும்பல்தான் கொன்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
கல்பர்கி கொலையை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கல்பர்கி மற்றும் தபோல்கர், பன்சாரே ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டது ஒரே துப்பாக்கி என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வாரம்தான் இந்த மூன்று பேரும் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று கொலைக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும், கொலைகளைச் செய்தது ஒரே கும்பலாக இருக்கும் என்று கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் பரமேஸ்வராவும் கூறியுள்ளார்.
அதேசமயம், இந்த மூன்று கொலைகளையும் செய்தது ஒரே கும்பல் இல்லை, இவை வேறு வேறு என்று மத்திய அரசு கூறியது பொய் என்றும் நிரூபணமாகியுள்ளது.
இந்த மூன்று கொலைகளிலும் 7.65 எம்எம் நாட்டுத் துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக அரசிடம் கொடுத்துள்ள ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆயுத நிபுணர்களின் தீவிர ஆய்வுக்குப் பின்னர் மூன்று கொலைகளிலும் பயன்படுத்தப்பட்டது 7.65 எம்.எம் நாட்டுத் துப்பாக்கி என்பது நிரூபணமாகியுள்ளது. இதை இரண்டு விதமாக கிராஸ் செக் செய்து பார்த்தோம். அதிலும் இதே முடிவே வந்தது.
இது நிச்சயம் எதேச்சையானதாக தெரியவில்லை. மாறாக ஒரே கும்பல்தான் இந்த 3 பேரையும் கொன்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கூறியுள்ளது சிஐடி..
இந்தக் கொலை வழக்கில் பல ஒற்றுமைகள் உள்ளன என்பது உண்மைதான். மூவருமே காலையில்தான் கொல்லப்பட்டனர். மூவரையுமே பைக்கில் வந்த இளைஞர்கள்தான் சுட்டுக் கொன்றனர். சிசிடிவி கேமரா இல்லாத இடங்களில்தான் மூவருமே கொல்லப்பட்டனர்.
பிப்வரி 20ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார் கோவிந்த் பன்சாரே. ஆகஸ்ட் 20ம் தேதி புனேவில் வைத்து நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்பர்கி ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications