வேலையை பறித்த சமோசா.. ஸ்மார்ட் வாட்ச் கொடுத்தும் இளைஞரை விடாத வியாபாரிக்கு நேர்ந்த கதி - வீடியோ
போபால்: ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றபோது இளைஞர் ஒருவர் சமோசா வாங்கி சாப்பிட்டார். போன்பே-வில் அவர் பணம் செலுத்தியபோது பிரச்சனையானது. இதையடுத்து ரயில் புறப்பட்டபோது அவரை விடாத வியாபாரி, ஸ்மார்ட் வாட்ச்சை பிடுங்கி வைத்து கொண்டு அவரது கையில் கூடுதல் சமோசாக்களை திணித்து அடாவடி செய்த வீடியோ வெளியாகி அதிர வைத்தது. இதுதொடர்பான புகாரை விசாரித்த ரயில்வே போலீசார் அந்த வியாபாரியை கைது செய்து ரயில்வே ஸ்டேஷனில் வியாபாரம் செய்வதற்கான லைசென்ஸை ரத்து செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் சமோசா கடை வைத்திருப்பவர் சந்தீப் குப்தா. ரயில்வேயின் அனுமதி பெற்று உரிய உரிமம் பெற்று அந்த கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் ஸ்டேஷனில் வந்திறங்கிய ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கினார்.

அந்த இளைஞர் ஆசையாக சந்திப் குப்தாவின் கடைக்கு சென்று சமோசா வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு அவர் போன்-பே மூலமாக பணம் செலுத்த முயன்றார். ஆனால் போன்-பேயில் இருந்து பணம் செல்லவில்லை.
இதற்கிடையே தான் ரயில் புறப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், சந்தீப் குப்தாவிடம் அடுத்து வரும்போது தருகிறேன். ரயில் புறப்பட்டுவிட்டது என்று கூறினார். ஆனால் அந்த சந்தீப் குப்தா அவரை விடவில்லை. அந்த இளைஞரின் காலரை பிடித்து இழுத்து பணம் தந்துவிட்டு செல்லும்படி கூறினார். இதையடுத்து அந்த நபர் மீண்டும் ஒருமுறை போன்-பே மூலமாக ஸ்கேன் செய்து பணம் செலுத்த முயன்றார். அதுவும் தோல்வியடைந்தது.
இதனால் அந்த இளைஞர் தன்னை விட்டு விடும்படியும், அடுத்த முறை கண்டிப்பாக பணம் தருவதாகவும் கூறினார். ஆனால் சந்தீப் குப்தா கேட்கவில்லை. இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான இளைஞர் தனது கையில் அணிந்திருந்த ‛ஸ்மார்ட் வாட்ச்'சை கழற்றி வியாபாரி சந்தீப் குப்தாவிடம் வழங்கினார்.
அதனை வாங்கி கொண்ட சந்தீப் குப்தா மீண்டும் இளைஞரை விடவில்லை. ரயில் ‛மூவ்' ஆகி கொண்டிருப்பதால் இளைஞர் அதில் ஏற முயன்றபோது மீண்டும் சந்தீப் குப்தா அவரை இழுத்து வைத்து கொண்டு கையில் சில சமோசாக்களை திணித்தார். ‛ஸ்மார்ட்ச் வாட்ச்' விலை அதிகம் என்பதால் கூடுதலாக 2 சமோசாக்களை இளைஞருக்கு சந்தீப் குப்தா வழங்கினார். அதன்பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றார்.
Shameful incident at Jabalpur , Railway Station
— Honest Cricket Lover (@Honest_Cric_fan) October 18, 2025
A passenger asked for samosas, PhonePe failed to pay, and the train started moving. Over this trivial matter, the samosa seller grabbed the passenger's collar, accused him of wasting time, and forced the money/samosa. The passenger… pic.twitter.com/Xr7ZwvEVY2
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் பரவியது. பலரும் வியாபாரியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட வியபாாரி சந்தீப் குப்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இ்த கோரிக்கையை தொடர்ந்து பயணியை துன்புறுத்தி ‛ஸ்மார்ட் வாட்ச்' பறித்த புகாரில் சந்தீப் குப்தா கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷனில் அவர் சமோசா விற்க வழங்கப்பட்ட லைசென்சும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தற்போது ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications