For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு ஜெயிலில் ஆம்பூர் பிரியாணி சாப்பிடும் சசிகலா

பெங்களூரு சிறையில் கைதிகளுக்கு வழங்கும் உணவுதான் சசிகலாவிற்கு கொடுக்கப்படுவதாக கூறினாலும் ஆம்பூர் பிரியாணியும் அவ்வப்போது சாப்பிடுகிறாராம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லையாம் அதனால் ஆம்பூரில் இருந்து பிரியாணி அனுப்பி வைக்கிறார்களாம்.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பெங்களூருவிற்கு காரில் சென்றார் சசிகலா. அப்போது மதிய உணவாக அவருக்கு ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வழங்கப்பட்டது.

பிரியாணியின் சுவை சசிகலாவிற்கு பிடித்துப்போனதால் அதுமுதல் வாரத்திற்கு 3 நாட்கள் ஆம்பூர் பிரியாணி அனுப்பி வைக்கப்பட்டதாம். தனியாக சமையல் அறை கொடுக்கப்பட்டதாகவும், சமையல் ஆள் வைத்து அசைவம் சமைத்து சாப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

சசிக்கு சலுகை

சசிக்கு சலுகை

சசிகலாவிற்கு ஜெயிலில் கொடுக்கப்படும் சலுகைகளை ரூபா அம்பலப்படுத்தியதால் அனைத்து சலுகைகளும் கட் செய்யப்பட்டது. இதனால் விஐபி அந்தஸ்தை இழந்தார் சசிகலா. இதனையடுத்து சாதாரண சிறை கைதிக்கு வழங்கப்படும் உணவுதான் கொடுக்கப்பட்டது.

சிறை உணவு

சிறை உணவு

சிறை உணவு வாயிலேயே வைக்கமுடியவில்லை என்றும் கொசுக்கடியும் இருப்பதாக தன்னை சந்திக்க வந்த தினகரனிடம் சசிகலா புகார் கூறினாராம். அப்போது தான் கையோடு கொண்டு சென்றிருந்த பார்சலை கொடுத்தாராம் தினகரன்.

ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி

இதனையடுத்து தனது ஆதரவு எம்எல்ஏ பாலசுப்ரமணியனிடம் தினகரன் சொல்ல, மீண்டும் ஆம்பூர் பிரியாணி பெங்களூரு சிறைக்கு பார்சல் போகிறதாம். வாரத்திற்கு 3 நாட்கள் பிரியாணி பார்சல் மீண்டும் ஆம்பூரில் இருந்து வருவதாக பெங்களூரு சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியாணி பார்சல்

பிரியாணி பார்சல்

இந்த முறை சசிகலாவிற்கு மட்டுமல்ல, சிறை அதிகாரிகளுக்கும் போகிறதாம். என்னதான் கட்டுப்பாடு போட்டாலும் பணம் பாதளாம் வரை பாயும்னு சும்மாவா சொன்னாங்க. இதெல்லாம் தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா என்றே தெரியலையே.

English summary
souces said Sasikala gets special food daily,she ates Ambur briyani in prison three times in a weekly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X