For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரப்பன அக்ரஹாராவிலிருந்து அமைச்சர்களுக்கு பறக்கும் 'ஆர்டர்கள்'.. அனுப்புவது 'சின்னம்மா'

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பாததால் அவர் சார்பில் அமைச்சர்களுக்கு அறிவரை வழங்கி வருகிறாராம் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்திக்கவில்லை.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.

முதல்வராக பதவியேற்ற கையோடு பெங்களூர் வந்த ஓ. பன்னீர் செல்வத்தை கூட ஜெயலலிதா சந்திக்கவில்லை.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவை சந்திக்கும் ஆசையில் சிறைக்கு வந்து வாசலில் சிறிது நேரம் நின்றுவிட்டு செல்கின்றனர்.

உத்தரவு

உத்தரவு

ஜெயலலிதா யாரையும் சந்திக்க மாட்டேன் என்று தெரிவித்தபோதிலும் சிறையில் இருந்து அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

சசிகலா

சசிகலா

ஜெயலலிதா அமைச்சர்களிடம் தான் கூற விரும்புபவதை சசிகலாவிடம் தெரிவிக்கிறாராம். சசிகலா அதை அமைச்சர்களிடம் தெரிவிக்கிறாராம்.

பழனிச்சாமி

பழனிச்சாமி

தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட சில அதிமுகவினர் கடந்த சில நாட்களாக அடிக்கடி சிறைக்கு வந்து சசிகலாவிடம் அறிவுரை பெற்று செல்கிறார்களாம்.

தினமும்

தினமும்

ஜெயலலிதா போன்று இல்லாமல் சசிகலா தினமும் 4 முதல் 5 பேரை சந்தித்து பேசுவதாக கர்நாடகா சிறை துறை டிஐஜி ஜெயசிம்மா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sasikala is reportedly giving instructions to ministers on a regular basis. She is just passing the message conveyed to her by Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X