பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் சென்ற சசிகலா! தி.நகரில் மலர்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Recommended Video

பெங்களூர்: 5 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா காரிலேயே சென்னை சென்றடைந்தார்.
சுமார் 3.15 மணியளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்தார் சசிகலா. வீடியோக்களில் அவர் சிக்காமல் இருக்க சிறை வாசலிலேயே காரை கொண்டுவந்துவிட்டு மீடியாக்கள் பார்வையிலிருந்து தப்பிக்க வைத்தனர் அவர் ஆதரவாளர்கள்.

இருப்பினும் கார் நகர்ந்து வந்த பிறகு, வீடியோவில் சசிகலா காருக்குள் அமர்ந்திருந்த காட்சிகள் சிக்கின. பச்சை நிற சேலையில் சசிகலா காணப்பட்டார். கார், ஒசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வழியாக சென்னை பயணித்தது. காரின் இரு பக்கத்திலும், பாதுகாவலர்கள் இருவர் நின்றபடி பயணித்தனர்.
கார் இரவு 8.20 மணியளவில் சென்னையின் எல்லையான பூந்தமல்லி சென்று சேர்ந்தது. முன்னதாக, வாலாஜாபேட்டை அருகே சற்று நேரம் கார் நிறுத்தப்பட்டு, அங்குள்ள பிரபல ஹோட்டலில் சசிகலா காபி சாப்பிட்டார்.
சென்னை பூந்தமல்லி வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து போரூர் வழியாக கார் பயணித்தது. அங்கும் வானவேடிக்கையோடு, உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து டிராபிக் மற்றும், தொண்டர்கள் வரவேற்பு போன்றவற்றால் கார் மெல்ல ஊர்ந்து சென்றது. சசிகலா தங்க உள்ள தி.நகரிலுள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டை கார் சென்றடைய இரவு 10 மணியானது. வீட்டை சுற்றிலும் நின்ற தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications