என்னா தில், என்னா ஸ்டைல்... சிறைக் கைதி போலவே தெரியலையே சசிகலாவைப் பார்த்தால்!
ஸ்டைலாக சுடிதாரில் ஷாப்பிங் போய்விட்டு தில்லாக சிறைக்கு திரும்பும் சசிகலாவின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மாடர்ன் மங்கையாக உலா வரும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கழுத்துவரை மறைக்கப்பட்ட ரவிக்கை அணிந்து அரசியல்வாதியாக மாறினார்.
50 நாட்கள் கூட அந்த வேடம் நீடிக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறை சென்றார். அங்கே அவருக்கு சிறை தண்டனைக்கு உரிய ஆடைகள் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசதியாக வாழ்க்கை நடத்தியுள்ளார் சசிகலா.

சசிகலாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் இளவரசியோடு தில்லாக வெளியே ஷாப்பிங் போய்விட்டு சசிகலா சிறை திரும்பும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Exclusive video 3..#Sasikala going to shopping from Jail. Is democracy alive??? These criminals should be hanged in front of public. pic.twitter.com/1y5x1ZazcQ
— Hari Prabhakaran (@Hariadmk) July 18, 2017
அதில் செம ஸ்டைலாக இருக்கிறார் சசிகலா. அவரது உடை மட்டுமல்ல நடை கூட மாறியுள்ளன. சசிகலாவை பார்த்தால் சிறைக்கைதி போலவே தெரியவில்லை. எங்கோ இன்ப சுற்றுலா சென்று விட்டு அங்கே ஷாப்பிங் செய்து விட்டு வருவது போல உள்ளது. இந்த வீடியோதான் இப்போ வைரலாகி வருகிறது.
சிறை கைதிகளுக்கு என்று உடை கலாச்சாரம் உள்ளது. ஆனால் சசிகலாவோ அதைப்பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
சசிகலா கைதிக்கான உடையை அணியாமல் நைட்டியுடன் வலம் வரும் வீடியோ வெளியானது. அந்த பீதி அடங்குவதற்குள் சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறையில் இருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications